×

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் ரூ.75 கோடியில் செயல்படுத்த திட்டம்

சென்னை: ஸ்மார்ட்  சிட்டி திட்டத்தின் கீழ், ₹75 கோடி செலவில், தி.நகரில் 24 மணி நேர குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில்  நடைபாைத வளாகம், பல அடுக்கு வாகன நிறுத்தம், பூங்காக்கள் மற்றும் சாலைகள் சீரமைப்பு, புதிய பாலங்கள் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை சென்னை மாநகராட்சி விரைவில் செயல்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தி.நகர் பகுதியில் தற்போது நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நீர் முதலிட்டு நிறுவனம் விரிவான திட்ட  அறிக்கை தயார் செய்தது. இதன்அடிப்படையில் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கு இந்த திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.
இதன்படி முதலில்  தி.நகர் பகுதியில் உள்ள குடிநீர் இணைப்புகள் எல்லாம் மேம்படுத்தப்படும்.

இதனைத் தொடர்ந்து குடிநீர் இணைப்புகள் 14 பகுதியாக பிரிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும். நீர் விநியோகத்தை கண்காணிக்க அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்காக சென்னை பெருநகர குடிநீர் வாரியம் இந்தப் பணியை செய்ய உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : city ,Tirur , Plan,implement,drinking water,supply,city,T.nagar,Smart City Scheme
× RELATED ஊட்டி நகர் பகுதியில்...